Story, வெள்ளை காகிதம் ஆகிறேன், [பாகம்-1] உதிரா காயங்கள். தமிழ் Only.

  "DOING SAFE"

English:

🖐️தமிழில் படிக்க வேண்டும் என்று விரும்பினால் கீழே தள்ளவும்👇


((((This story was in தமிழ் language only. Not in English language. Because this story's English words are not suitable and not easily understand for reading. So, this story was only in தமிழ்.👒)))))

#The Inspirational Story for you.

#வெள்ளை காகிதம் ஆகிறேன்.

                   [பாகம்-1]

#உதிரா காயங்கள்:




முதலாளி : ஏய்! தங்கராசு!          சீக்கிரமா போ, நேரம் ஆகுது.  உண்ண லாரிய ஓட்ட சொன்ன, உருட்ட சொல்லல. நல்லா வேகமா லாரிய ஓட்டு!


தங்கராசு : ஐயா ! வேகமாதான் போய்ட்டு இருக்கேன். 


முதலாளி : லோடு ஏத்துற இடத்துல இருந்து ஃபோன் பண்ணிட்டே இருக்காங்க. சீக்கிறம் போ.


தங்கராசு : ஐயா! ஏற்கனவே நா அறுவதுல தான் போய்ட்டு இருக்கேன். இந்த ரோட்ல இதுக்குமேல போனா நமக்குத்தான் பிரச்சன.


முதலாளி : எந்த பிரச்சன வந்தாலும் நா பாத்துகுறேன். நீ எம்பதுல போ!

 

தங்கராசு : என்னம்மோ பண்ணுங்க, சரி போறேன்.


முதலாளி : ம்ம்! சரி உனக்கு யாரு சும்மா ஃபோன் பண்ணிட்டே இருக்குறது ? 



தங்கராசு : வீட்ல இருந்து என் மனைவிதான் ஃபோன் பண்ணிட்டே இருக்கா! பையன் பேசனும்னு சொன்னானாமா.


முதலாளி : ரொம்ப முக்கியம் தங்கராசு!  ஃபோன வச்சிட்டு வேலைய பாரு (கோபத்துடன்). சரி இப்ப எங்க வந்துருக்கோம் ? 


தங்கராசு : பாரதிநகர்ட்ட வந்துட்டோம்.


முதலாழி : சோ! இப்பதான் இங்க வந்துருக்கியா! சீக்கிரம் போ.


தங்கராசு : ஐயா !  இந்த ஊர்ல மக்கள் நடமாட்டம் நிறையா இருக்கு . அதுனால மெதுவாதான்  போக முடியும்.


முதலாளி :  அதெல்லாம் நீ பேசாத! வேகமா போகச் சொன்னா வேகமா போ.


தங்கராசு :  சரிங்க ஐயா !(வெறுப்புடன்)


முதலாளி : ஏ ! அங்க பாரு (பதட்டத்துடன்).



(விபத்து ஏற்பட்டது போல் ஓர் சத்தம்)


தங்கராசு : அய்யையோ! போச்சு! (பயத்துடன்) 

முதலாழி : சோ! அநியாயமா அந்த நாய கொன்னுட்டியே தங்கராசு. பாத்து போக மாட்டியா‌! 


தங்கராசு: ஐயா! நீங்க சொன்னது நாலதான் வேகமா போனேன் , நீங்கதான் இதுக்கு  காரணம். நா இப்பவே  லாரிய நிறுத்துறேன். பாவம் அந்த நாய்! (பரிதாபத்துடன்) 


முதலாளி: ஏய் தங்கராசு ! லாரிய நிறுத்தாத அங்க லோடு அவசரம். கொஞ்சம் பின்னாடி திரும்பி பாரு, அங்க எத்தனப்பேர் இருக்காங்கன்னு. அங்க பாரு,‌ஒரு கெழவன் அழுதுட்டு இருக்கான். அந்த நாய் அவரோடது போல.

லாரிய நிறுத்துனனா அவங்க நம்மல சும்மா‌ விடமாட்டங்க. நாயதான கொன்ன, மனுஷன கொல்லலைல.

தங்கராசு : நா மட்டும் இதுக்கு காரணம் இல்ல ஐயா ! (கோபத்துடன்)


முதலாழி : சரி ! சரி ! நாயதான கொன்னோம், மனுஷன கொல்லலைல விடு.


தங்கராசு : சரி போறேன்! (வேறு வழியின்றி)


இரண்டு வருடத்திற்கு பிறகு பாரதிநகரில் :


சூர்யா : அப்பா! அங்க பாருங்க ! எவ்வளவு கூட்டம்னு.


அப்பா : ஆமா சூர்யா! அங்க எதுக்கு அத்தன பேர் இருக்காங்கன்னு தெரியலையே! அந்த கூட்டத்துக்கு பக்கத்துல ஒரு கட்டவுட் இருக்கு பாரு அதுல என்ன எழுதிருக்குனு சத்தமா படி. 


சூர்யா : சரிப்பா !  "நமது பாரதிநகரில் ஷெல்லிதாசனின்  ஐம்பதாவது கதை புத்தகம் "ஐந்தறிவு மனிதர்கள்" வெளியீட்டு விழா". "நேரம் காலை 10.00 மணியளவில், முதல் வரும் ஐம்பது பேர்க்கு அனுமதி இலவசம் . அனைவரும் வருக்க! வருக்க!".


அப்பா : அட  சூர்யா! , அது "வருக்க வருக்க " இல்லப்பா, "வருக வருக " (சிரிப்புடன்).


சூர்யா : சரிப்பா, ஆமா.. அந்த ஷெல்லிதாசன் யாரு?


அப்பா : ஷெல்லிதாசன தெரியாத!. அட உன்னோட பாட புத்தகத்துல கூட ஒரு கதை உனக்கு ரொம்ப புடிச்சுருக்குனு சொன்னைல.


சூர்யா : ஆமாப்பா!


அப்பா :  அந்த கதை பேருக்கூட ஏதோ "கனவில் கண் கண்..."

சூர்யா : "கனவில் கண் மலரும்"!


அப்பா : ம்ம்! "கனவில் கண் மலரும்". அந்த கதைதான் ஷெல்லிதாசன் எழுதுன முதல் கதை.


சூர்யா :  அந்த கதை எனக்கு ரொம்பப்புடிக்கும் பா !. நீங்க அவருடைய கதைய படிச்சுருக்கிங்களா?


அப்பா : ஆமா சூர்யா ! நெரயா கதை படிச்சுருகேன்.


சூர்யா : சரி,  அப்போ அவரெழுதுன கதைல உங்களுக்கு பிடிச்ச கதை எதுப்பா?


அப்பா : அதுவா , " எழுச்சி மாநாடு" னு அவரோட 25 ஆவது கதை.


சூர்யா : அப்படியாப்பா ! அந்த கதைல அப்படி என்ன சிறப்பு. 


அப்பா : அந்த கதை அரசியல் பேசுர கதை. நீ வழந்ததுக்கு அப்பறம் அந்த  கதைய படி . அப்பதான் உனக்கு  அந்த கதை   புரியும்.


சூர்யா : சரிப்பா !  நம்மலும் அங்க ஷெல்லிதாசனப் பாக்க போலாமாப்பா?


அப்பா :  எனக்கும் போலாம்னு ஆசையாதான்  இருக்கு ,ஆன 11 மணிக்கு, நா வேலைக்கு போகணுமே.


சூர்யா : அப்பா பிலீஸ் ப்பா ! போகலாம். 11 மணிவரைக்கும் இருக்கலாம். அப்பறம் நீங்க வேலைக்கு போங்க. (ஏக்கத்துடன்)


அப்பா : சரி போலாம் ஆனா நம்ம 10:50க்கெல்லாம் கெலம்பனும் சரியா?


சூர்யா : ஐய்! சூப்பர்ப்பா!   


அப்பா : சரி போலாம். சூர்யா! சீகிறோம் போனாதான் இவவசம் . வா போகலாம்.


சூர்யா : சரிப்பா!


(இருவரும் ஷெல்லிதாசனிருக்கும் அரங்கிற்க்கு அருகில் சென்றனர்) 


(சென்றுக்கொண்டிருக்கும் பொழுது....)


சூர்யா : ஆஆ ! அப்பாஆஆஆ! 


அப்பா : என்னாச்சு சூர்யா ?


 சூர்யா : அப்பா! காலுல எறும்பு  

கடிச்சுருச்சுப்பா , வலிக்குது! (வலியுடன்)


அப்பா : அச்சோ! (பாவத்துடன்)


சூர்யா : என்னையே அந்த எறும்பு கடிச்சுருச்சுல. இப்பப்பாருங்கப்பா ,அந்த எறும்ப என்ன பன்றனு.

(ஆத்திரத்துடன்) 


(சூர்யா எறும்பை தனது காலால் கொல்ல போனான்)


அப்பா : சூர்யா!  எறும்ப கொல்லாத அது பாவம். (பாவத்துடன்)


சூர்யா : அப்பா!  அந்த எறும்பு என்ன கடிச்சுருச்சு ,அத நா பலிவாங்கனும்.


அப்பா : பலிவாங்கிரது ஒரு தவறான செயல் சூர்யா. உன்னோட பாட்டி எனக்கு ஒன்று சொல்லித் தந்தாங்க  அது என்ன தெரியுமா?


சூர்யா : என்னதுப்பா?


அப்பா : உன்ன கடிச்ச எறும்ப கொல்லாம அத நீ காப்பாத்தி ஓரமா வச்சினா, எறும்பு கடிச்ச எடத்துல வலிக்காதுனு சொன்னாங்க.


சூர்யா : நெஜமாவாப்பா?.


அப்பா  : ஆம சூர்யா! ஒரு உயிர எப்பையும் கஷ்டபடுத்த கூடாது. அந்த எறும்பு வாழ்ற எடத்துல நீ கால வச்சதுநாலதான் ,  எறும்பு தன் உயிர காப்பாத்திகரத்துக்காக உன்ன கடிச்சுருச்சு, அது எறும்போட இயல்பு சூர்யா! அதனால நீயும் அந்த எறும்ப கொல்லாத, உயிர் வாழ விடு.


சூர்யா : சரிப்பா! இனிமே நா எந்த உயிரையும் துன்புருத்தமாட்டேன் ப்பா. 


(சூர்யா தனது காலிலிருந்த எறும்பை இலையால் எடுத்து கீழே விட்டான்)


அப்பா  : அருமை சூர்யா ! வா உள்ள போலாம்.


(இருவரும் ஷெல்லிதாசனிருக்கும் அரங்கிற்குள் சென்றனர்)


(உள்ளே சென்று மேசையில் அமர்ந்தனர் )


(மேடையில் ஷெல்லிதாசனும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் அமர்த்திருந்தனர்)


தொகுப்பாளர் : வணக்கம் ஷெல்லிதாசன் அவர்களே!


ஷெல்லிதாசன் : வணக்கம் ! வணக்கம் !.


தொகுப்பாளர் :  இங்கு வருகை தந்ததற்க்கு நன்றி, நீங்கள் தங்களது சிறப்புமிக்க 50ஆவது  கதையை இப்பாரதிநகரில் வெளியிடுவதன் நோக்கம்  யாது ?


ஷெல்லிதாசன் : இரண்டு வருடத்திற்கு  முன்பு இதே பாரதிநகருக்கு துரைசாமி என்னும் நபரை காண வந்தேன். அப்பொழுது என் கண்முன் நிகழ்ந்த நிகழ்வுதான், இக்கதையின் சொந்தகாரர் "பாரதிநகர்" என்பதே, இங்கு வெளியிடுவதன் நோக்கம்.


தொகுப்பாளர் : சிறப்பு ஐயா! அப்படி என்றால் இக்கதை ஒரு உண்மைகதையா?


ஷெல்லிதாசன் : இல்லை! இக்கதை முழுமையாக உண்மை கதை அல்ல. இக்கதையில் வரும் "ஒரு நபர்" என்னும் கதாப்பாத்திரமே நான். இது என்னுடைய கற்பனை கலந்த உண்மைக்கதை.


தொகுப்பாளர்: ஐயா! தங்களது அடுத்த கதை, எதனை மையமாக் கொண்டிருக்கும் என்பதை தெரிந்து கொல்லலாம?


ஷெல்லிதாசன் : என்னுடைய அடுத்த கதையில் "நம்பிக்கை"யை மையமாக

கொண்டு எழுதயிருக்கிறேன்.


தொகுப்பாளர் : அருமை ஐயா !(வியப்புடன்)


ஷெல்லிதாசன்: அந்த நம்பிக்கை யாருக்கும் இருக்க கூடாது என்று எழுத இருக்கிறேன்.


தொகுப்பாளர் : அப்படியா ! அது என்ன நம்பிக்கை ?(ஆச்சரியத்துடன்)


ஷெல்லிதாசன் :  "மூடநம்பிக்கை"யைப் பற்றி.


தொகுப்பாளர் : சிறப்பு ஐயா! நாங்கள் அக்கதைக்காக மிக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.


ஷெல்லிதாசன் : ம்ம்ம் !


தொகுப்பாளர் : இங்கு கூடியுள்ள பொதுமக்களும் நானும் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் ஷெல்லிதாசனின் சிறப்புடைய 50ஆவது கதை "ஐந்தறிவு மனிதர்கள்"யை ஷெல்லிதாசனின் மூலமாகவே முதன் முதலில் நாம் கேட்கபோகிறோம். என்ன ஷெல்லிதாசன் ஐயா அவர்களே! எங்களுக்காக ஒருமுறை உங்களது கதையை

கூறுவிர்களா? (ஆர்வத்துடன்).


ஷெல்லிதாசன் : நிச்சயமாக கூறுகிறேன். 


(ஷெல்லிதாசனின் 50ஆவது கதை)


 *ஐந்தறிவு மனிதர்கள்

     


        ஓட்டைகள் உடைய ஓட்டு வீட்டில் தனியாக ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார் . அடுத்த வேலை உணவுக்கு பணமில்லாத வறுமை நிலையில் அவர் இருந்தார். முகத்தை மறைக்கும் அளவிற்க்கு தாடியையும் தலைமுடியையும்  வைத்திருந்தார். அவர் வலுவிழந்து மிகச் சோர்வாகவும் இருந்தார். அவர் பசியால் வாடி வந்தார். தனது இறப்பு இன்றைக்கா நாளைக்கா என்று எதிர்பார்த்து வாழ்ந்தார்.பிறகு வீட்டில் எங்காவது பணம் இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தார். அவரது சட்டைப் பையில் கை விட்டுப் பார்த்தார். சட்டைப் பையில் பத்து ரூபாய் இருந்தது. எல்லா உணவு வகைகளும் விலை ஏறிவிட்டது . பத்து ரூபாய்க்கு எந்த  உணவும் இல்லை என்று யோசித்தார். பத்து ரூபாய்க்கு  பால் வாங்கிக்குடித்து , சற்று பசியைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று சிந்தித்தார். பிறகு கிழிந்த சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு, அலுக்கு வேட்டியை கட்டிக் கொண்டு அவரது துருப் பிடித்த மிதிவண்டியில் கடைக்குச் சென்றார்.

 கடைக்காரரிடம் பத்து ரூபாயை நீட்டி பால் தாருங்கள் என்று முதியவர் சொன்னார். அதற்க்கு கடைக்காரர் பால் விலை ஏறிவிட்டது, பாலின் விலை பன்னிரண்டு ரூபாய் என்றார். அதனை கேட்டவுடன் முதியவரின் முகம் சோர்ந்துவிட்டது. முதியவரிடம் பத்து ரூபாயைத் தவிர வேறு பணம் இல்லை. முதியவரின் முகத்தைப் பார்த்தவுடன் கடைகாரரின்  மனம் இலகியது. பிறகு கடைகாரர் அவரிடமிருந்த பத்து ரூபாயை வாங்கி பாலை அவரிடம் கொடுத்து , அடுத்தமுறை வரும்பொழுது இரண்டு ரூபாயை தாருங்கள் என்று சொன்னார். முதியவர் சிறிது முகம் சிரித்து கடைக்காரருக்கு  நன்றி தெருவித்தார். பிறகு  பாலை வாங்கிக் கொண்டு மிதிவண்டியில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.


முதியவர் சென்றுக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு வாலிபன் மிக வேகமாக அவரது இருச்சக்கர வாகனத்தில்  வந்து முதியவரின் மிதிவண்டியில் மோதினான். மோதியதும் முதியவர் கீழே விழுந்தார். அவர் விழுந்ததைப் பார்த்து அந்த வாலிபன் அவருக்கு 

உதவாமல் அவனுடைய வாகனத்தை எடுத்து தப்பித்துச் சென்றான்.


முதியவர் விழுந்ததைப் பார்த்து அனைத்து மக்களும் முதியவரின் பக்கம் வந்தனர். வந்த அனைவரும் முதியவரை சுற்றி நின்றனர். சிலர் முதியவரின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் திறன் பேசியில் முதியவரை புகைப்படம் எடுத்தனர். பிறகு இரண்டு பேர் முதியவரின் கையையும் காலையும் பிடித்து முதியவரை ஓரமாக வைத்துவிட்டு அதன்பின மிதிவண்டியையும் ஓரமாக வைத்தனர். அதன்பின் அனைவரும் முதியவரை விட்டு விலகிச் சென்றனர். அவரது கைகளிலும் கால்களிலும் இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அவர் வாங்கி வந்த பாலும் கீழே விழுந்து கொட்டிக்கொண்டிருந்தது.


முதியவர், ஏற்பட்ட விபத்தினால் மயக்க நிலைக்கு சென்றார் . திடிரென்று மக்களின் அலுவது போன்று கூச்சலிடும் சத்தம் முதியவரின் மயக்கத்தை தெளிய வைத்தது. முதியவரின் எதிர்ப்புறம் மக்களின் பெருங்கூட்டம். முதியவருக்கு  என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. முதியவரின் அருகில் ஒருவர் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் முதியவர் ,"அங்கு என்ன ஆயிற்று? " என்று சாய்ந்து அமர்ந்த வாரே கேட்டார் .

அதற்கு அவர்," ஏதோ கட்சி தலைவர்  நடைப்பயணம் செய்ய வந்தாராம். வந்துக்கொண்டிருக்கும் பொழுது கல் தடிக்கி கீழே விழுந்து விட்டாராம். இதற்கு போய் மக்கள் அழுது, கூச்சலிட்டு ,அமரவைத்து, தண்ணீர் கொடுத்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று  கேலிச் சிரிப்போடு சொன்னார். "ஆனால் உனக்கு விபத்து ஏற்ப்பட்டது. சாலையில் நீ இடையூறாக உள்ளாய், என்று உன்னை ஒரு குப்பையைப்போல் எடுத்து ஓரமாக தூக்கி போட்டுவிட்டு சென்று விட்டார்கள். இதுதான் உன்னைப்போல் ஒரு ஏழைக்கும் ஒரு பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம். பணம் எவ்விடம் உள்ளதோ அவ்விடமே மக்களிருப்பார்கள்" என்று சொல்லி விட்டு கையில் வைத்திருந்த தண்ணீர் கோப்பையை சாலையின் நடுவில் போட்டு விட்டு சென்றார். அவர் அதை குப்பைத்தொட்டியில் போடாமல் சாலையில் குப்பைப்போட்டார். அதனைப் பார்த்த முதியவர் என்னை குப்பையைப்போல் ஓரமாக எறிந்தவர்களுக்கும் குப்பையைப் சாலையில் ஏறிந்த உனக்கும் என்ன வித்தியாசம் என்று நினைத்து  சிரித்தார். சிறிது நேரம் கழித்து அவ்வழியில் ஒரு தெருநாய் வந்தது. 


நடத்து போய்க்கொண்டிருந்த அந்தத் தெரு நாய் ,முதியவரை  கண்டதும் திடிரென்று  நின்று தலையை திருப்பி முதியவரை பார்த்து விட்டு சென்றது. முதியவர் தாகத்தில் தவித்தார். அவரால் எழுந்திருக்க முடியவில்லை அதனால் அமர்ந்தபடியே காயம் கொண்ட கையை ஏந்தி அவ்வழியில் போகும் அனைவரிடமும் ‌குடிப்பதற்கு தண்ணிர் கேட்டார்.


 அவ்வழியாக வந்த ஒருவர் முதியவரை பார்த்து "கைகளும் கால்களும் நன்றாக தானே இருக்கிறது. எதற்காக  பிச்சைக் கேட்கிராய் .உழைத்து சாப்பிடு "என்று கேவலமாய் முதியவரை இகழ்ந்து சென்றார். மற்றொருவர் முதியவருக்கு இரண்டு ரூபாய் பிச்சைப் போட்டார். அதற்கு முதியவர் "நானொன்றும் பிச்சைக் காரணில்லை" என்று கூறி பிச்சைப் போட்ட இரண்டு  ரூபாயை கோபத்துடன் அவர் மேல் எறிந்தார் . "மற்றவர்களிடம் தண்ணீர் கேட்டதும், பிச்சைக்குச்  சமம் என்றால் அப்படிப்பட்ட தண்ணிரும் எனக்கு தேவையில்லை ". "தாகத்தால் தவித்துச் இரந்தாலும் பரவாயில்லை பிச்சைக் கேட்க கூடாது" என்று முடிவெடுத்தார் முதியவர். சிறிது நேரம் முன்பாக அவ்வழியில் சென்ற தெரு நாய் மீண்டும் நடந்து வந்தது. இப்பொழுதும் அந்த நாய் சற்று நின்று முதியவரை பாத்து விட்டு சென்றது.

சுட்டரிக்கும் வெயில் முதியவரை அணு அணுவாய் கொன்றது. சுட்டரிக்கும் வெயிலால் மீண்டும் மயக்க நிலைக்குச் சென்றார்.


அப்பொழுது அவ்வழியில் ஒரு தகப்பனும் அவரது மகனும் நடத்து சென்றனர். அவரது மகன் முதியவரை வினோதமாக பார்த்தான். அதற்கு தகப்பன் மகனைப்பார்த்து "நீ நன்றாக படிக்கவில்லை என்றால், நாளை நீயும் இந்த முதியவரை போலத்தான் சாலையில் கிடப்பாய்" என்று கூறி மகனை அழைத்து சென்றார். முதியவர் மயக்கத்தில் இருந்ததால் அவருக்கு எதுவும்  தெரியவில்லை. மீண்டும் அவ்வழியாக வந்த  நாய் சிறிது  நேரத்திற்கு முன் ஒருவர் சாலையில்‌ எறிந்த தண்ணீர் கோப்பையை முதியவரின் முகத்தில் படும்படி அதன் காலில் தள்ளியது. தண்ணீர் கோப்பை  முகத்தில் பட்டதும் முதியவர் எழுந்தார். எழுந்து அந்த நெருநாயைப் பார்த்தார். பின்பு அவர் காலடியிலிருந்த  தண்ணீர் கோப்பையைப் பார்த்தார். மிகுந்த தாகத்திலிருந்த முதியவர்  அந்த தண்ணீரை எடுத்து குடித்தார். அவர் அந்த தண்ணீரை குடிக்கும் பொழுது அவருக்கு ஏற்பட்ட  மகிழ்ச்சி அவரது வாழ்நாளில் அவர் பெற்றதில்லை. தண்ணீரை குடித்து முடித்ததும் கையில் வைத்திருந்த கோப்பையை தவரவிட்டார்.  பின்பு கண்கள் களங்கியபடி தலையை கீழே இரக்கி சிறு புன்னகையுடன் இரு  கைகளையும் கூப்பி நாய்க்கு நன்றி தெரிவித்தார். ஆனால் அந்நாய்

அங்கில்லை. தெய்வம் வானிலிருந்து இரங்கி மனிதனுக்கு உதவி செய்தவுடன் மறைந்து விடுவது போல் அந்நாயும்

முதியவருக்கு உதவி செய்தவுடன் மறைந்து சென்றது. 

    (கதையின் இடையில்)


சூர்யா : அப்பா! அப்பா! அப்பாஆஆஆஆ!


அப்பா : என்ன சூர்யா?


சூர்யா : உங்களுக்கு வேலைக்கு நேரம் ஆகுதுபா ! மணி 11னு .

அப்பா  : பரவால சூர்யா! இந்த கதைய பாதில விட்டுட்டு போக முடியாது. எவ்வளவு நேரம் ஆனாலும் பரவால இந்தகதைய முடிச்சுட்டுதா போறோம் சரியா?


சூர்யா  : சரிப்பா!


அப்பா: சூர்யா! சத்தம் போடாம கதைய கேளு .


சூர்யா  : ம்ம்!


        (மீண்டும் கதையில்) 


     இங்கு நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளையும் ஒரு நபர்  தேனீர்கடையிலுள்ள  இருக்கையில் அமர்ந்து வெகுநேரமாக முதியவரை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த நாய் முதியவருக்கு செய்த உதவியைக் கண்டதுமும் அந்த நபர் திடீரென எழுந்து மிக வேகமாக சென்றார். முதியவர் தண்ணீரை குடித்ததும் மனநிறைவு அடைந்தார். முதியவர் மனநிறைவோடு உறங்கினார். சிறிது நேரம் கழித்து அந்த நபர் தனது மகளுடன் அங்கு வந்தார். அவர் மகளின் கையில் ஒரு நெகிழி பை இருந்தது. அந்த பையில் ஒரு உணவு பொட்டலம் இருந்தது. அந்த நபரும் அவர் மகளும் முதியவரின் அருகில் வந்தார்கள். அந்த நபர் உணவை எடுத்து முதியவருக்கு தருமாறு தன் மகளிடம் கூறினார் . மகளும் முதியவரை அழைத்தாள். முதியவரும் தூக்கத்திலிருந்து எழுந்து என்னவென்று கேட்டார். பொட்டலத்தை முதியவரிடம் நீட்டினாள். 

முதியவர், நான் பிச்சை காரனில்லை என்றார். அதற்கு அந்த மகள் "முதியவரே நான் பிச்சை குடுக்கவில்லை. இதற்கு பெயர் தானம். இன்று எனது பிறந்தநாள்.அதனால் இவ்வுணவை மறுக்காமல் ஏற்று கொள்ளுங்கள், இது எனது ஆசை " என்றாள். அதை கேட்டவுடன் முதியவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த நபருக்கும் அவரது மகளுக்கும் நன்றி தெரிவித்தார். பிறகு முதியவர் அந்த உணவை திறந்தார். முதியவர் குணிந்து உணவை கையால் எடுத்து தனது உதடிடம்  கொண்டு போனார். திடிரென்று ஒரு சத்தம் "வெளவ் வெளவ்" என்று. முதியவர் தலையை நிமிர்ந்து பார்த்தார். 

தெய்வம் மீண்டும் இரங்கி வந்தது.  அந்நாய் அங்கிருந்தது. முதியவர் அந்நாயை அழைத்தார். நாயும் பசியில் இருக்கிறது என்று முதியவருக்கு தெரியும். அதனால் அந்த உணவில் பாதியை நாயிக்கு ஒதுக்கி வைத்தார். நாயும் அவ்வுணவை திருப்தியாக உண்றது. பிறகு சிறிது உணவை தன் வாயால் கவ்விக்கொண்டு முதியவரை  பார்த்து வாலை ஆட்டிக் கொண்டு சாலையோரம் சென்றது. அந்நாய் வாலை ஆட்டியது முதியவருக்கு நன்றி தெரிவிப்பது போல சில பொதுமக்களுக்கு இருந்தது. அந்நாயின் நன்றி  உணர்வை பார்த்து, அவர்கள் வியந்தனர்.  திடிரென்று ஒரு பெரும் சத்தம், சிரித்திக்கொண்டிருந்த முகங்கள் அனைத்தும் சுருங்கின. எழுந்திருக்க முடியாமலிருந்த முதியவர், பாய்ந்து ஓடினார். முதியவரும் மக்களும் சாலையின் பக்கம் ஓடினர். முதியவர் அழுது  கொண்டே ஓடி , சத்தம் கேட்ட இடத்திற்கு சென்றார். ஒரு ஐந்தறிவு மனிதன் லாரியில் வேகமாக வந்து தெய்வமான நாயை இடித்து சென்றான். நாயின் உடலும் நன்றி தெரிவித்த வாலும் இரண்டு துண்டாய் சாலையில் கிடந்தது. முதியவர் தன் கையால் வாலை எடுத்து கொண்டு நாயிடம் சென்றார். நாய் உயிருடன் இருக்கிறதா என்று, முதியவர் தன் கையை நாயின் கழுத்தில் வைத்துப்பார்த்தார். தெய்வம் இறந்தது.  தெய்வம் இறந்ததால் முதியவர் அதிர்ச்சியானார். ஆனால் அதைவிட பெரும் அதிர்ச்சி "இப்போதும் மக்கள் சுற்றிநின்று வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்" என்று. முதியவர் மனதில் ஒரு வினா எழுந்தது "இவர்களெல்லாம் ஆறறிவுடைய மக்களா? இல்லை ஐந்தறிவுடைய மாக்களா? "என்று. பிறகு முதியவர் எழுந்து , ஓரமாக எறிந்த தனது மிதிவண்டியை எடுத்து வந்து, தெய்வத்தை தனது கைகளால் தூக்கி மிதிவண்டியின் பின்புறத்தில் வைத்தார். கண்ணீர் வழியும் கண்களுடன் மிதிவண்டியை ஓட்டி சென்றார். நடக்க முடியாமலிருந்த முதியவர் தற்பொழுது மிதிவண்டி ஓட்டி சென்றதை கண்டு அங்கிருந்த மக்கள் வியந்தனர். முதியவர் இருட்டில் தள்ளாடியபடியும் தெய்வத்தின் இறப்பால் அழுதபடியும் வீட்டிற்கு மிதிவண்டியில் சென்றார் .

 முதியவர் வீட்டை அடைந்தார். வீட்டின் அருகிலுள்ள இடத்தில் முதியவர் குழி தோண்டினார்.  முதியவர், தெய்வம் வாயில் வைத்திருந்த உணவை எடுத்து தோண்டிய  குழியின் அருகில் வைத்தார். ஆழமாகத் தோண்டி தெய்வத்தை குழிக்குள் வைத்தார். தெய்வத்தை உள்ளே வைத்து குழியை மூடினார். செடியில் வாடியிருந்த ஒரு பூவை பிடுங்கி தெய்வத்தின் குழிமேல் வைத்து அழுதுக்கொண்டிருந்தார். தெய்வம் மண்ணுக்குள் சென்றது. முதியவரும் பசி என்ற அரக்கனின் உதவியால் தெய்வத்திடம் சென்றார். அப்பொழுது  ஒரு சிறிய உயிர் கத்திக்கொண்டே முதியவரின் வீட்டினுள் நுழைந்தது.  தன் அன்னையின் மணத்தை முகர்ந்து பின்தொடந்து வந்தது, அந்த சிறிய தெய்வம். வந்து குழியின் அருகிலிருந்த உணவை சாப்டது. 

பிறகு சிறிய உயிர் தெய்வத்தின் குழியின் மேல் படுத்துக்கொண்டு தனது அன்னையை அழைத்தது. ஆனால் தெய்வம் செவிகொடுக்கவில்லை.

..........................................................


ஷெல்லிதாசன்  :நன்றி!........


சூர்யா :  அப்பா! ஏன்ப்பா அழுகுரிங்க? 


(அப்பா கதையை கேட்க கேட்க அழுதார்)


 (அப்பாவால் பேச முடியவில்லை) 


(கவளையுடன் அழுதுக்கொண்டேயிருந்தார்)


அப்பா : சூர்யா!   நீ நிகழ்ச்சி முடிஞ்சதுக் கப்பறோம் வெளிய  வா, நா வெளிய இருக்கேன்.

 

(அப்பா அழுதுக்கொண்டே அரங்கிலிருந்து வெளியேறினார்)


(அழுதுக்கொண்டே சாலையோரம் நின்றார்)

(அப்பொழுது அப்பாவின் நெருங்கிய நண்பனும் கட்சி தொண்டனும்மான திரு.துரைசாமி சாலையில் வந்தார்)


( துரைசாமி அப்பாவை பார்த்து அப்பாவின் அருகில் வந்தார்)


(வந்து அப்பாவிடம்)


துரைசாமி  : ஏய். தங்கராசு ! எதுக்கு இப்படி ரோட்ல நின்னு கண்ண கசகிட்டு இருக்க? லாரி ஓட்ட போகலையா?


(அப்பாவால் எதுவும் பேச முடியவில்லை)


( அப்பா குற்ற உணர்ச்சியில்  தலைகுனிந்து அழுதுக்கொண்டே இருந்தார் )


துரைசாமி : சரி சரி ! நீ சொல்லவேணாம்.

உன் பையன் வரான் கண்ணத்தொட. 


(என்று சொல்லிவிட்டு துரைசாமி அப்பாபை கடந்துச் சென்றார்)


(அப்பா கண்களை துடைத்தார் ).


சூர்யா : அப்பா! அப்பா! ஏன்பா

அழுதீங்க ?


அப்பா : ஒன்னுமில்ல சூர்யா!


சூர்யா : அப்பா! ஷெல்லிதாசன் கதை சொல்லி முடிச்சதும் தொகுப்பாளர் "இக்கதையின் கருத்து" என்னனு கேட்டாங்க. அதுக்கு ஷெல்லிதாசன் "மனிதன் வாழ்வில் மனிதம் எண்பது அழிந்துக் கொண்டிருக்கிறது"னு சொன்னாங்கப்பா!

நெஜமாவே அழிஞ்சுட்டு வருதாப்பா?


அப்பா : ஆமா சூர்யா!

 

சூர்யா : அப்பா! வீட்டுக்கு  போலாமா?


(அப்பாவும் சூர்யாவும் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தனர் )

(செல்லும் வழியில் அப்பாவின் மனதில், ஷெல்லிதாசனின் கதையும் குற்ற உணர்ச்சியும் வருத்திக்கொண்டே இருந்தது)

(இருவரும் வீட்டை அடைந்தனர்) 


(அம்மா இருவரையும் சாப்பிட அழைத்தாள்)


(மூவரும் அமர்ந்து உணவை உண்டன)


(அப்பாவால் உணவை உண்ண முடியவில்லை)


( அப்பா எழுந்து அவரின் அறைக்குள் சென்று இருக்கையில் அமர்ந்தார்)


(அப்பா நாட்குறிப்பேடு எழுதினார்)


(சூர்யாவும் அம்மாவும் அப்பாவின் அறைக்குள் நுழைந்தனர்)


சூர்யா : அப்பா! என்னப்பா டைரி எழுதுரீங்களா?


அப்பா : ஆமா சூர்யா!


சூர்யா : தாங்கப்பா  நா படிக்கிறேன்.


அப்பா : இத நீ இப்ப படிச்சாலும் உனக்கு முலுசா புரியாது சூர்யா. இத படிக்க  வேண்டிய நேரம் வரும். அப்ப படி சரியா?


சூர்யா : சரிப்பா!.  அப்பா நா உங்க கிட்ட ஒன்னு கேக்கனும் .


அப்பா :  கேளு சூர்யா! 


சூர்யா : ஷெல்லிதாசன் கதைல தெய்வத்த கொன்ன லாரிக்காரன் நீங்களா இருந்தா என்னப்பா பன்னிருப்பிங்க?

 

(அப்பாவால் பதில் சொல்ல முடியவில்லை) 


சூர்யா : சொல்லுங்கப்பா?


அப்பா : தெரியலையே சூர்யா!

(தயக்கத்துடன்)


சூர்யா : அப்பா தெரியலைனு சொல்ல கூடாது. நீங்க அந்த லாரிய ஓட்டிருந்த உடனே கீழ இறங்கி அந்த முதியவருக்கும் அந்த நாய்க்கும் உதவி செய்துருப்பிங்களப்பா?


அப்பா : கண்டிப்பா செய்துருப்பேன் சூர்யா! ( கண்கள் கலங்கியபடி )


சூர்யா : சரிப்பா!


அப்பா : சூர்யா! ஒருவேள நா அந்த லாரிய ஓட்டி, நாயை கொன்னுருந்தா நீ என்ன செய்வ?


சூர்யா : நா நல்ல படிச்சு, வாழந்து, போலிஸாகி உங்கள கைது செய்வேன்ப்பா! 

 

(அம்மாவும் அப்பாவும் திகைத்துப் போனார்கள்)


(அப்பா வியப்படைந்தார் )


(அப்பா, சூர்யாவை அருகில் அழைத்தார்) 

 

அப்பா : சூர்யா! இங்க வா!


சூர்யா : சொல்லுங்கப்பா.


அப்பா :  எனக்கு நீ  ஒரு சத்தியம் பன்னு! 

உனக்கு ஆறு வயசில்ல அறுவது வயசானாலும் எந்த உயிரையும் துன்புறுத்த கூடாது. உன்னால எந்த உயிரும் கஷ்டபட கூடாது.

உயிர்ன மனுஷங்க மட்டுமில்ல. எறும்புல இருந்து யானைவர எந்த உயிரையும் துன்புறுத்த கூடாது. செடிக் கொடியும் உயர் தான்.

 

சூர்யா :  சரிப்பா! நா எப்பையும் எந்த உயிரையும் துன்புறுத்த மாட்டேன்ப்பா ! 


அப்பா : ம்ம் ம்ம் !!

 

(அம்மா, சூர்யாவை அப்பாவின் அறையிலிருந்து வெளியே அழைத்து சென்றார்)


(அம்மா சூர்யாவை பார்த்து)

 

அம்மா : சூர்யா! உண்மையாவே அந்த நாய கொன்னது அப்பாவா இருந்தாலும் கைது செய்வியா?


சூர்யா : ஆமா அம்மா! தப்பு யாரு செஞ்சாலும் தப்பு தான்.


அம்மா : ம்ம்! சரி தூங்கு.


சூர்யா : சரிம்மா!

...............

பாகம் 2 : விரைவில்...


(படித்ததற்கு நன்றி)

..................DOING SAFE....


Hello Readers;

 This Story was Created and

 written by B.Benjamin - பா.பெஞ்சமின்

Published by DOINGSAFE.


                             ××××


.Readers must commend About this Story.