Story, The eye blossoms in the dream. கனவில் கண் மலரும், தமிழ் Only.

 "DOING SAFE"

English:

🖐️தமிழில் படிக்க வேண்டும் என்று விரும்பினால் கீழே தள்ளவும்👇


((((This story was in தமிழ் language only. Not in English language. Because this story's English words are not suitable and not easily understand for reading. So, this story was only in தமிழ்.👒)))))


#The Story of one Boy:

*The eye blossoms in the dream.

தமிழ்:


*கனவில் கண் மலரும்.

            சிவராமன் என்பவன் பள்ளியில் சுமாராகப் படிக்கும் மாணவன். இவனது உடல் பலமற்றதாகவும், இவனது முகம் குச்சிக்குப் போட்டியாகவும் இருக்கும். அவனது பெயரில் ராமன் என முடிவதால் அவன் பெயரை வைத்தும், முகத் தோற்றத்தை வைத்தும் அவனுடன் பயிளும் சக மாணவர்கள் அவனை கேலி செய்வார்கள். ஒருநாள் வகுப்பரையில் ஆசிரியர் அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தார். சிவாவின் முறை வரும்பொழுது பின்வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்களில் சிலர் சிவாவிற்க்கும் அருகில் அமர்ந்திருக்கும் சில மாணவர்களுக்கு மட்டும் கேட்கும் படி 'ஆடுரா ராமா ஆடுரா ராமா ' என கேலி செய்தும், சிரித்தும் சிவாவை படிக்கவிடாமல் செய்தனர். சிவா படிக்கமுடியாமல் தடுமாற்றம் கொண்டான். அதனால் ஆசிரியரும் அவனை முகம் சுலிக்கும்படி திட்டி அவனிடம் படிக்க வேண்டாம் என்று கூறி அமர வைத்தார். சிவா மனஉழச்சலுக்கு ஆளானான். அன்று நாள்முழுவது அவன் வருத்தத்துடனே இருந்தான்.   

பள்ளி முடிந்து வீட்டை அடைந்தான். அவன் வீட்டில் விளையாடும் பொழுதும், இரவு உணவை உண்ணும்பொழுதும் ,சோகத்திலேயே இருந்தான். 

பிறகு அவன் உறங்கும் பொழுது அவனுக்கு மிதமான காய்ச்சல் ஏற்ப்பட்டது. அவன் மருந்துயெதுவும் எடுத்து கொள்ளவில்லை.                             அவன் உறங்கத்தொடங்கினான். ஆழ்ந்த உறக்கத்திர்க்குச் சென்றான்.           மிதமான காய்ச்சல் அதிகமானது. பிறகு உடல் வெப்பமும், வியர்வையும் அவனை உறங்க விடாமல் செய்தது. 

சிவா உறக்கத்திலிருந்து எழுந்தான். திடிரென வெளிச்சம் அவனது கண்களை விளிக்க முடியாத படி செய்தது. மெல்ல மெல்லக் கண்களை விளித்தான். அந்த வெளிச்சத்திலிருந்து ஒரு உருவம் தோன்றியது. அந்த உருவம் சிவாவின் அருகில் வந்தது. சிவாவிற்க்கு அந்த உருவம் யார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த உருவம் பேசியது மட்டும் அவனுக்கு கேட்டது. வெளிச்சத்திலிருந்து வந்த உருவம் சிவாவிடம், உன்னை கேலிச் செய்தவர்களுக்கு நீ யார் என்று உணர்த்து. அதற்க்காக என் சக்திகளை உனக்கு தருகிறேன். இந்த சக்தியால் நீ நினைப்பதை எளிதில் செய்யமுடியும். இந்த சக்தியை நன்கு பயன்ப்படுத்திகொள், என்று கூறியது.  பின்னர் அந்த உருவமும் மறைந்துவிட்டது, அந்த வெளிச்சமும் மறைந்துவிட்டது. சிவாவிற்க்கு என்ன நடந்தது என தெரியாமல் பயத்தில் ஓடி உறங்கச் சென்று, கண்களை இருக்கமாக மூடி மீண்டும் உறங்கினான்..                   இரவு நிகழ்ந்த நிகழ்வுகளால் சிவா காலையில் தாமதமாகவே எழுந்தான். அவன் எழுத்ததிலிருந்து ஒரு குழப்பத்திலேயே பள்ளிக்குச் செல்லத் தயாராகினான்.                                             சிவா பேருந்தில் பள்ளிக்குச் சென்றும் கொண்டிருந்தான். அப்பொழுது பேருந்தில் ஏறிய ஒருவர் சிவாவை தள்ளிவிட்டுப் பொருட்படுத்தாமல் சென்றார்.                                                 ஆத்திரம் அடைந்த சிவா நேற்று இரவு அந்த உருவம் கூறியதை நினைத்துப் பார்த்தான். அந்த உருவம் கூறியது உண்மையா பொய்யா என்று தெரியாததால் தன்னைக் தள்ளிவிட்டுச் சென்றவர் மீது சோதனை செய்துப் பார்க்கலாம் என தீர்மானித்தான் சிவா.     தன்னைத் தள்ளிவிட்டுச் சென்றவர் இப்பொழுது தடிக்கி விழ வேண்டும் என்று நினைத்தான் சிவா.                அடுத்த நொடியேத் தள்ளிவிட்டவரும் தடுக்கி விழுந்தார்.                                     சிவா நினைத்தது நடந்தாலும் அவனால் அதை ஏற்று கொள்ளமுடியவில்லை .அவர் தாமாகவே தடிக்கி விழுந்திருக்களாம் என்று எண்ணி அவர் மீது மற்றொரு சோதனையை மேற்கொண்டான் சிவா.                             அவர் இப்போது எனது கண்களை பார்த்து மண்ணிப்புக் கேட்க வேண்டும் என்று நினைத்தான் சிவா.                   அவன் நினைத்தப் படியே அவரும் சிவாவின் கண்களைப் பார்த்து மண்ணிப்புக் கேட்டார்.                             அவர் மண்ணிப்புக் கேட்டப்பின்புதான், நேற்று இரவு அந்த உருவம் கூறியது உண்மை என உணர்ந்தான் சிவராமன். மிகுந்த மகிழ்ச்சியில் பேருந்திலிருந்து இறங்கி பள்ளியை அடைந்தான்.             சிவா வகுப்பறையில் அமர்ந்திருந்திப்பொழுது ,  சிவாவின் அருகில் அமர்ந்திருக்கும் மாணவன் 'நான் அதிகமாக பணம் வைத்திருக்கிறேன். உன்னிடம் சிறிது பணம் கூட இல்லை'  என்று சிவாவைப் பார்த்து கேலி செய்தான். அதற்க்கு சிவா வழக்கத்துக்கு மாறாக அந்த மாணவனை பார்த்து சிரித்தான்.                                     நான் உன்னை கேலி செய்கிறேன் நீ எதற்காக சிரிக்கிறாய் ?     என்று அந்த மாணவன் சிவாவிடம் கேட்டான்.         அதற்கு சிவா எதுவும் கூறாமல் கண்ணை மட்டும் மூடி கொண்டு ஏதோ நினைத்தான். அவன் கையில் இருக்கும் பணம் இப்பொழுது மறைந்து விட வேண்டும் என்று சிவா நினைத்தான்.  சிவா கண்ணை திறக்கும் பொழுது அந்த மாணவனின் கையில் இருந்த பணம் மறைந்துவிட்டது. அதனால் அந்த மாணவன் வருந்தினான். ஆனால் சிவா அவனைப் பார்த்து சிரித்தான் . அந்த சிரிப்பு அந்த மாணவனை மேலும் வருத்தமடையச் செய்தது.


             சிறிது நேரம் கழித்து ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். அனைத்து மாணவர்களையும் ஆசிரியர் படிக்க வைத்தார். சிவாவின் முறை வந்தது. சிவா படிப்பதற்க்கு ஆயத்தமானான், பின்வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்களில்  தாமோதரன் என்பவன் சிவாவை கேலி செய்ய 'ஆடுரா ராமா என்றுச் சொல்ல வாயைத் திறந்தபொழுது சிவா அவனை பார்த்து ஒன்று நினைத்தான். அவன் இப்பொழுது 'ஆடுரா தாமோ' என்று சொல்லி அவன் பெயரை அவனே கேலிசெய்ய வேண்டும் என்று நினைத்தான்.                                 பின்பு சிவா படிக்கக் தொடங்கினான், அவன் நினைத்தப் படியே, தாமோதரன் சிவாவை கேலிச் செய்ய 'ஆடுரா ராமா 'என்பதற்க்குப் பதிலாக 'ஆடுரா தாமோ ஆடுரா தாமோ' என்று சொல்லி அவனை அவனே கேலி செய்து கொண்டான். வகுப்பறையிலிருந்த அனைத்து மாணவர்களும் தாமோதரனைப் பார்த்துச் சிரிந்தனர். தாமோதரன் அவமானத்தில் தலைக்குனிந்தான்.     ஆசிரியர் அனைத்து மாணவர்களையும் அமைதியாக இருக்கும்படி சொன்னார், பிறகு ஆசிரியர் பாடம் நடந்தத் தொடங்கினார். அந்த நேரத்தில் சிவா, ஆசிரியரைப் பார்த்து அவரின் கூந்தல் காற்றில் நடனமாட வேண்டும் என்று நினைத்தான் .                                           அவன் நினைத்தவாரே ஆசிரியரின் கூந்தல் காற்றில் நடனமாடியது..           அனைத்தது மாணவர்களும் ஆசிரியரைப் பார்த்து சிரித்தானர்.கேலி செய்தனர். கூச்சலிட்டனர். ஆசிரியர் அவமானப் பட்டார்.                             அதனால் ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறினார். சிவா மகிழ்ச்சி கெண்டான்.     பிறகு தாமோதரனின் நெருங்கிய நண்பனான கிஷோர், சிவா தாமோதரனை பார்த்து சிரித்ததால் சிவாவை  இகழ்ந்தான் கிஷோர்.       ஆனால் அவன் பெண் குரலில் இகழ்ந்தான்.

அதனைப் பார்த்து சிவாவும் சிரித்தான் தாமோதரனும் சிரித்தான்.               கிஷோர், ' உனக்காக நான் வந்து பேசினேன் ஆனால் நீயும் என்னைப் பார்த்து சிரிக்கிறாய்'  என்று ‌தாமோதரனிடம் ஆத்திரம் கொண்டான். அது மட்டுமல்லாமல் தாமோதரனிடமிருந்து பிரிந்து சென்றான் கிஷோர். தாமோதரன் வருந்தினான். இதற்கு காரணம் கூட சிவா தான்.     கிஷோர் பெண் குரலில் பேச வேண்டும் என்று நினைத்ததும் சிவாதான்.          சிவா அவனது சுயநலத்திற்காக செய்தான்.                                               ஆனால் அது  தாமோதரனிடமும் கிஷோரிடமும் பிரிவை ஏற்படுத்தியது.     சிறிது நேரம் கழித்து சிவா வகுப்பறைக்குள் நுழைந்தான்.   வகுப்பறையில் சிரிப்புச் சத்தம்.   அனைத்து மாணவர்களும் தமோதரனையும் கிஷோரையும் பார்த்து கேலிசெய்து சிரித்தனர்.  ஆனால் தாமோதரனும் கிஷோரும் அவர்களைப் பார்த்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.                                                   அதனை பார்க்கும் பொழுது சிவாவின் மனம் சிறிது வருந்தியது. நானும் இப்படிதானே அமைதியாக இருந்தேன். இப்பொழுது அவர்கள் நான் அடைந்த துன்பத்தை அடைகிறார்கள். அவர்களின் முகத்தில் முழிக்காதபடி சிவா வகுப்பறையை விட்டு வெளியேறினான்.   வெளியேறி நடந்து சென்றுகொண்டிருந்த சிவா அவனது ஆசிரியரைப் பார்த்தான். ஆசிரியரின் கூந்தல் காற்றில் நடனமாடிக்கொண்டே இருந்தது .அதனை பார்த்து மற்ற ஆசிரியர்களும் கேலி செய்து சிரித்தனர் .   ஆசிரியரையும் பார்த்து, வருந்தினான் சிவா.                                                             தமக்கு தீமை நினைத்தவர்களுக்கு தாமும் தீமை நினைத்தால் அவர்களுக்கும், தமக்கும் என்ன வேறுபாடு? என்று நினைத்து, தான் செய்தது மிகப் பெரிய தவறு என உணர்ந்தான் சிவா. பிறகு இங்கு நிகழ்ந்த அணைத்து நிகழ்வுக்கும் நான்தான் காரணம் என்னை மன்னியுங்கள் என்று மன்னிப்பு  கூற சென்றான் சிவா .         அந்த நேரத்தில் 'சிவா! சிவா!' என்று அவனது அன்னையின் குரல் அழைத்து.      சிவா அவனை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் தேடினான். ஆனால் அவனது அன்னையை காணவில்லை.       பிறகு "சிவா ஆஆஆஆஆஆஆஆஆஆ" என்று மிகவும் அதிகமான சத்தம் கேட்டது.

  திடிரென தூக்கத்தை விட்டு எழுந்தான் சிவா.                                                 தாமோதரன், கிஷோர், ஆசிரியர் மற்றும் பலரை கேலி செய்தது, பிறகு அவர்களிடம் மன்னிப்பு கேட்க நினைத்தது போன்ற அனைத்தும் கனவு என தெரிந்தவுடன் சிவா வருத்தமடைந்தான்.

அவனுக்கு அந்த அதிஷ்ட சக்தி இல்லை என்பதை எண்ணி சிறிது வருந்தினான்.   ஆனால் பிறகு அவன் மனம் மகிழ்ந்தான்.                                                 அந்த அதிஷ்ட சக்தி இருந்தாலும் என்னால் பிறருக்குத் துன்பம் தான் ஏற்படும் அதற்கு அந்த சக்தி இல்லாமல் இருப்பதே நல்லது என உணர்ந்தான் சிவா.                                                           பின்னர் முக மலர்ச்சியுடன் எழுந்து பற்களை துளக்கிவிட்டு தன் தந்தையின் அருகில் அமர்ந்தான் சிவா ‌.               அவனது தந்தை செய்தித்தாள் படித்து கொண்டிருந்தார்.                         அப்பொழுது செய்தித் தாளிலிருந்த ஒருவரின் படத்தைப் பார்த்தான் .         அவரது முகமும் என்னைப்போல் ஒரு குச்சிக்குப் போட்டியாக தான் இருக்கிறது என்று சொல்லி சிரித்தான்.        எதற்க்காக சிரிக்கிராய் .அவர் யார் என்று உணக்கு தெரியுமா? என்று தந்தை வினாவினார். சிவாவிற்கு அவர் யார் என்று தெரியவில்லை. இவர்தான் சுந்தர் பிச்சை. பிரபல ஊடகமான கூகுளின் தலைமைப் பொருப்பாளர். மேலும் இவர்  நம் மாவட்டத்தின் அருகிளுள்ள மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தந்தை, சந்தர் பிச்சை பற்றிய சில செய்திகளை சிவாவிடம் கூறினார்.                         அதனை கேட்டவுடன் சிரித்துக்  கொண்டிருந்த சிவா சிந்தித்தான் .                 நாம் யார் என்று பிறருக்கு உணர்த்துவதற்க்கு எந்தவித சக்திகளும் தேவையில்லை நன்கு படித்தால் போதும் என்பதை புரிந்து கொண்டான் சிவராமன்.  அவன் முடிவெடுத்தான் சுந்தர் பிச்சையை முன்னுதாரனமாக கொண்டு தீவிரமாக படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.                           பிறகு சிவா பள்ளிக்குச் சென்றான். அந்த நாளும் ஆசிரியர் அணைத்து, மாணவர்களையும் பாடம் வாசிக்க வைத்தார். அப்பொழுது சிவாவின் முறை வந்தது.

ஆசிரியர் சிவாவை படிக்க வேண்டாம் என்று கூறி அடுத்த மாணவனை படிக்க சொன்னார். ஆனால் சிவா  'நான் படித்தே தீருவேன்' என கூறி ஆசிரியரின் அனுமதி இன்றி படிக்க ஆரம்ப்பித்தான்  ஆசிரியர் அவனை இகழவில்லை. ஏன்னென்றால் சிவா  மிகவும் சரளமாகவும் தெளிவாகவும் படித்தான்.

              அவன் படித்ததைப் பார்த்து ஆசிரியரும் மாணவர்களும் வியந்தனர். அவன் படிப்பதை நிறுத்தியவுடன் மாணவர்களும் ஆசிரியரும் கைகளைத் தட்டி அவனை    பாராடினர்.       அவா்களின் பாராட்டால் சிவாவின் முகம் சிவந்தது. அந்த பாராட்டு சிவாவை இத்தோடு நிறுத்தி விடாமல்  மேலும் படிக்க வேண்டும் என்ற தூண்டுதலை  தூண்டியது. சிவா அந்த நிகழ்வுக்கு பின் மிக தீவிரமாக படிக்க ஆரம்பித்தான்.   மாணவர்களுக்குப் பிடித்த நண்பனாகவும் ஆசிரியர்களுக்கு பிடித்த  மாணவனாகவும் மாறினான்  சிவா.     அவன் பள்ளியில் முதல் மதிப்பெண்ணும் பிறகு மாநில அளவில் முதல் மதிப்பெண்ணும் பெற்றான்.       சிவாவை கேலி செய்தவர்களெள்ளாம் இப்பொழுது அவனிடம் சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து அதை புரிந்து கொள்ளுகிறார்கள்.                                                                 ....................................                   பத்து வருடங்கள் கலித்து சிவாவின் நன்பர்களும் ஆயிரியர்களும் சிவாவிடம் பேசுவதையும் பலகுவதையும் பெருமையாக நிணைத்தனர்.

ஏனென்றால் இப்பொழுது சிவராமன் அனைவராலும் "மாமனிதன்" என்று அழைக்கப்பட்டார்.

(படித்ததற்கு நன்றி)

..................DOING SAFE....


Hello Readers;

 This Story was Created and

 written by B.Benjamin - பா.பெஞ்சமின்

Published by DOINGSAFE.


                             ××××


.Readers must commend About this Story.